الفاتحة
The Opening • 7 ayahs • Meccan
1பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
2புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!
3(அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்;
4கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி!
5(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம்.
6(அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்து!
7(அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்களும் அல்லர். வழிகெட்டவர்களும் அல்லர்.